Equal Partners

December 16, 2020

Engaging men and boys for gender equality

Colombo, Sri Lanka (17 Dec 2020) Sri Lanka ranks 90 out of 189 in the Gender Inequality Index (2019). Over the years, significant strides have been made to create equal opportunities for women, particularly in terms of free and equal access to education and healthcare. However, in the face of structural barriers and harmful societal norms that perpetuate gender stereotypes - while gender inequalities can affect anyone - evidence points to women facing the most discrimination particularly in their own homes and social spheres.

The Gender Social Norms Index (2020), produced by the United Nations Development Programme (UNDP), has found pervasive bias—by both men and women—against women worldwide. According to the analysis, 30% of women and men interviewed across 75 countries agree that it is justifiable for a man to beat his partner. A study titled ‘Broadening Gender: Why Masculinities Matter’ (2013) highlighted that 20% of men in Sri Lanka indicated that they had committed some form of intimate partner violence in their lifetime and 66% felt that this was due to a sense of “entitlement”. Similarly, the recently published Women’s Wellbeing Survey (2019) found that 35.3% of women in Sri Lanka agreed that men can have a good reason to hit their wives. The ongoing pandemic itself has disproportionally affected women with an increase in unpaid domestic work and care burdens, economic disempowerment and an exponential increase in sexual and gender-based violence.

Working towards the ambitions of the 2030 Agenda, UNDP in Sri Lanka together with the Ministry of Women & Child Development, Preschools & Primary Education, School Infrastructure & Education Services, and the Men Engage Alliance launched a trilingual media campaign titled ‘Equal Partners’ in an effort to engage men and boys to advance gender equality in Sri Lanka.

Making the keynote address at the launch, Hon. Piyal Nishantha De Silva, State Minister of Women and Child Development, Preschools & Primary Education, School Infrastructure & Education Services stated, “Women and men should have equal access to resources and opportunities in all spheres of life including at home where decision making and domestic chores need to be equally shared. Closing the gender gap is everyone’s responsibility – from individuals and families to structures and institutions – we all have a role to play to achieve gender equality in Sri Lanka”.

Gender equality is its own development goal and is reflected in 45 targets and 54 gender-specific indicators of the Sustainable Development Goals (SDGs). Achieving these targets and closing the gender gap will therefore create a multiplier effect across all the SDGs and accelerate their achievement.

Highlighting the important role of gender equality in creating a sustainable world, Mr. Robert Juhkam, Resident Representative of UNDP in Sri Lanka stated, “Gender inequality is a major barrier to human development and COVID-19 is pushing back progress made on gender equality around the world. To build forward better towards integrative SDG achievements broadly, discriminatory attitudes and practices that hold women back must be confronted and eliminated.”

The campaign consists of a series of videos and talk-shows that will be aired on national media to promote gender equality in the country. Introducing the campaign, Ms. Samitha Sugathimala, National Coordinator of the Men Engage Alliance added, “Engaging men and boys is critical to advancing gender equality in Sri Lanka. Through the ‘Equal Partners’ campaign we are addressing unequal power relations between men and women, and transforming traditional notions of masculinity and gender norms to ensure that all people are equal and free from discrimination in order to build a world where gender justice and human rights are promoted and protected”.

The ‘Equal Partners’ campaign serves as a reminder that gender equality is a fundamental human right and should be made an urgent priority this decade of action.

Full Video Series: English | සිංහල | தமிழ்

###

සහයෝගයේ සහකරුවෝ: ස්ත්‍රී පුරුෂ සමාජභාවීය සමානාත්මතාව ඇති කිරීම උදෙසා පිරිමින් හවුල් කරගැනීම

2020 දෙසැම්බර් 17, කොළඹ: ශ්‍රී ලංකාවට ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය සම්බන්ධ සමානාත්මතා දර්ශකයේ (2019) හිමි  ව ඇත්තේ ස්ථාන 189 ක් අතරින් 90 වැනි ස්ථානය යි. පසුගිය කාලය තුළ, විශේෂයෙන් ම අධ්‍යාපනය හා සෞඛ්‍යය යන අංශ සම්බන්ධයෙන් කාන්තාවන්ට සමාන අයිතිවාසිකම් ලැබෙන බව සහතික කිරීම සඳහා සැලකිය යුතු පියවර රාශියක් ගෙන ඇත. එහෙත් ව්‍යුහාත්මක බාධා සහ, ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය සම්බන්ධ ගතානුගතික මතවාද පවත්වාගෙන යාමට දායක වන හානිකර සමාජ සම්ප්‍රදායන් හමුවේ, ඒවායින් ඕනෑ ම කෙනෙකුට බලපෑමක් ඇතිවිය හැකි පසුබිමක් තුළ වුව ද, තමන්ගේ ම නිවෙස් තුළ හෝ සමාජ අවකාශයන් තුළ වැඩි වශයෙන් ම පහත්කොට සැලකීමට ලක්වන්නේ කාන්තාවන්ට බව සාක්ෂි මගින් පැහැදිලි වේ.

එක්සත් ජාතීන්ගේ සංවර්ධන වැඩසටහන මගින් පිළියෙල කරනු ලබන ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය සම්බන්ධ සමාජයීය ප්‍රතිමාන දර්ශකය (2020) මගින් හඳුනාගෙන ඇති ආකාරයට, ලොව පුරා ම කාන්තාවන්ට එරෙහි ව, පිරිමින් මෙන් ම කාන්තාවන් තුළ ද පුළුල් ව ව්‍යාප්ත වූ අගතිගාමී අදහස් පවතී. මෙම විශ්ලේෂණය තුළ දී සම්මුඛ සාකච්ඡාවලට එක් වූ, රටවල් 75 ක කාන්තාවන් හා පිරිමින් අතරින් 30% ක් ම පවසා ඇත්තේ පිරිමියෙකු සිය සහකාරියට පහරදීම සාධාරණ ක්‍රියාවක් බව යි. ශ්‍රී ලංකාවේ පිරිමින් අතරින් 20% ක් තම ජීවිත කාලය තුළ කිසියම් අවස්ථාවක තම සහකාරිය සම්බන්ධයෙන් ප්‍රචණ්ඩ ලෙස කටයුතු කර ඇති බව පවසා ඇති බවත්, ඒ සඳහා තමන්ට ‘නිසර්ග අයිතියක් ඇති බව’ 66% ක ප්‍රතිශතයක් විශ්වාස කළ බවත්,  ‘Broadening Gender: Why Masculinities Matter’ (2013) නම් අධ්‍යයනය මගින් අනාවරණය වේ. මීට සමාන ව මෑතක දී පළ කරන ලද ‘Women’s Wellbeing Survey’ (2019) වාර්තාව මගින් පැහැදිලි වන්නේ, පිරිමියෙකුට තම බිරිඳට පහර දීම සඳහා අයිතියක් ඇති බවට ශ්‍රී ලංකාවේ කාන්තාවන් අතරින් 35.3% ක් විශ්වාස කරන බව යි. දැනට පවතින වසංගත තත්ත්වය ද කාන්තාවන්ට අසමාන ලෙස බලපා ඇති අතර, මුදල් නොගෙවනු ලබන ගෘහස්ථ රාජකාරි සහ රැකවරණ වගකීම් ප්‍රමාණය ඉහළ යාම, ආර්ථික බලරහිතකරණය සහ ලිංගික හා ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය පදනම් කරගත් හිංසනය දැඩි ලෙස ඉහළ යාම ආදිය ඔස්සේ මෙම බලපෑම් එල්ල වී තිබේ.

තම 2030 න්‍යාය පත්‍රයේ අරමුණු කරා යන ගමනේ එක් පියවරක් වශයෙන්, ශ්‍රී ලංකාවේ එක්සත් ජාතීන්ගේ සංවර්ධන වැඩසටහන, කාන්තා හා ළමා සංවර්ධන, පෙර පාසල් හා ප්‍රාථමික අධ්‍යාපන, පාසල් යටිතල පහසුකම් හා අධ්‍යාපන සේවා රාජ්‍ය අමාත්‍යාංශය සහ Men Engage Alliance සමග එක් වී, ශ්‍රී ලංකාවේ ස්ත්‍රී පුරුෂ සමානාත්මතාව වෙනුවෙන් පිරිමින් හා පිරිමි දරුවන් සම්බන්ධ කරගැනීමේ අරමුණින්, ‘සහයෝගයේ සහකරුවෝ: ස්ත්‍රී පුරුෂ සමාජභාවීය සමානාත්මතාව ඇති කිරීම උදෙසා පිරිමින් හවුල් කරගැනීම’ යන තේමාව යටතේ ත්‍රයිභාෂික ජනමාධ්‍ය ප්‍රවර්ධන වැඩසටහනක් ආරම්භ කර තිබේ.

මෙම වැඩසටහන ආරම්භ කරන අවස්ථාවේ ප්‍රධාන දේශනය සිදුකරමින්, කාන්තා හා ළමා සංවර්ධන, පෙර පාසල් හා ප්‍රාථමික අධ්‍යාපන, පාසල් යටිතල පහසුකම් හා අධ්‍යාපන සේවා රාජ්‍ය අමාත්‍ය පියල් නිශාන්ත ද සිල්වා මහතා මෙසේ පැවසීය. “ජීවිතයේ සියලු ම අවස්ථාවල දී කාන්තාවන්ට හා පිරිමින්ට සමාන අවස්ථා පැවතිය යුතු යි. මෙයට නිවසේ දී තීරණ ගැනීම සහ ගෙදරදොර කටයුතු හවුලේ සිදුකිරීමත් ඇතුළත්. ස්ත්‍රී පුරුෂ සමාජභාවයන් අතර ඇති පරතරය පියවීම අප සැමගේම වගකීමක්. ශ්‍රී ලංකාව තුළ ස්ත්‍රී පුරුෂ සමානාත්මතාව ඇතිකිරීම සම්බන්ධයෙන්, තනි පුද්ගලයන් හා පවුල්වල පටන් ව්‍යුහයන් හා ආයතන දක්වා අප සෑම දෙනාට ම වගකීමක් පැවරී තිබෙනවා.”

ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය සම්බන්ධ සමානාත්මතාව යනු  සංවර්ධන ඉලක්කයක් වන අතර, තිරසාර සංවර්ධන ඉලක්ක අතර මූලික ඉලක්ක 45 ක් සහ ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය සම්බන්ධයෙන් සුවිශේෂී වූ දර්ශක 54 ක් තුළ එය නිරූපණය වේ. මෙම ඉලක්ක ළඟා කරගනිමින් ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය සම්බන්ධ පරතර පියවීම මගින් සියලු ම තිරසාර සංවර්ධන ඉලක්ක සම්බන්ධයෙන්  ප්‍රබල බලපෑමක් ඇති වනු ඇති අතර ඒවා ළඟා කරගැනීම වඩාත් පහසු වනු ඇත.

තිරසාර ලෝකයක් නිර්මාණය කිරීමේ දී ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය සතු වැදගත් කාර්යභාරය සම්බන්ධයෙන් අදහස් දක්වමින් ශ්‍රී ලංකාවේ එක්සත් ජාතීන්ගේ සංවර්ධන වැඩසටහනේ නේවාසික නියෝජිත Robert Juhkam මහතා මෙසේ පැවසීය. “ස්ත්‍රී පුරුෂ අසමානාත්මතාව යනු මානව සංවර්ධනයට ඇති ප්‍රධානතම බාධාවක්. ලොව පුරා ස්ත්‍රී පුරුෂ සමානාත්මතාව සම්බන්ධයෙන් අත්පත් කරගෙන තිබූ ප්‍රගතිය COVID-19 නිසා අපට අහිමි වෙමින් තිබෙනවා. තිරසාර සංවර්ධන ඉලක්ක ළඟා කරගැනීමේ පුළුල් අරමුණ සහිත ව ඉදිරියට යන ගමනේ දී, කාන්තාවන් පහත් කොට සලකන ආකල්ප හා පරිචයන්වලට අභියෝග කර ඒවා මුලිනුපුටා දැමිය යුතු යි.”

නව වැඩසටහන රට තුළ ස්ත්‍රී පුරුෂ සමානාත්මතාව ප්‍රවර්ධනය කිරීම ඉලක්ක කරගත් වීඩියෝ හා සාකච්ඡා වැඩසටහන් මාලාවකින් සමන්විත වන අතර ඒවා ජාතික තලයේ ජනමාධ්‍ය ඔස්සේ විකාශය කෙරේ. මෙම වැඩසටහන හඳුන්වා දෙමින් ‘Men Engage Alliance’ හි ජාතික සම්බන්ධීකාරිකා සමිතා සුගතිමාලා මහත්මිය මෙසේ පැවසුවා ය. “ශ්‍රී ලංකාව තුළ ස්ත්‍රී පුරුෂ සමානාත්මතාව ඇතිකිරීමේ උත්සාහයට පිරිමින් සහ පිරිමි දරුවන් සම්බන්ධ කරගැනීම අතිශයින් වැදගත්. ‘සහයෝගයේ සහකරුවෝ’ වැඩසටහන යටතේ අප පිරිමින් හා කාන්තාවන් අතර පවතින අසමාන බල සම්බන්ධතා පිළිබඳ ව සාකච්ඡා කරමින්, සියලු ම දෙනා සමාන බව හා පහත්කොට සැලකීම්වලට ලක් නොවන බව තහවුරු කරගැනීම සඳහා පුරුෂායිතය හා ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය සම්බන්ධ සාම්ප්‍රදායික ප්‍රතිමානයන් වෙනස් කිරීමට ලක්කරමින්, ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය සම්බන්ධ යුක්තිය හා මානව අයිතිවාසිකම් ප්‍රවර්ධනය වන හා ආරක්ෂා වන ලෝකයක් නිර්මාණය කිරීමට උත්සාහ කරනවා.”

‘සහයෝගයේ සහකරුවෝ’ වැඩසටහන, ස්ත්‍රී පුරුෂ සමානාත්මතාව මූලික මිනිස් අයිතිවාසිකමක් බවත්, ඒ සඳහා මෙම ක්‍රියාකාරී දශකය තුළ වහා ම ප්‍රමුඛත්වය ලබාදිය යුතු බවත් සිහිපත් කරවනු ඇත.

Full Video Series: English | සිංහල | தமிழ்

###

ஒத்துழைப்பின் பங்காளர்கள்: பாலின சமத்துவத்திற்காக ஆண்கள் மற்றும் சிறுவர்களை ஈடுபடுத்துதல்

கொழும்பு, இலங்கை (17 டிசம்பர் 2020)பாலின சமத்துவமின்மை குறிகாட்டியில் அடங்கியுள்ள 189 நாடுகள் வரிசையில் இலங்கை 90 ஆம் இடத்தில் (2019) உள்ளடங்கியுள்ளது. கடந்த காலங்களில் பெண்களுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு பெருவாரியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, கல்வி மற்றும் சுகாதார வசதிகளுக்கு இலவச மற்றும் சமமான வகையில் அணுகும் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், கட்டமைப்புசார் தடைகள் மற்றும் தீங்கான சமூகசார் விதிமுறைகள் போன்றன பாலின பாகுபாட்டை தூண்டுவதுடன் – இவ்வாறான பாலின பாகுபாடுகள் எவரையும் பாதிக்கக்கூடும் என்பதுடன் – தமது சொந்த இல்லங்களிலும் சமூக மட்டத்திலும் பெண்கள் பெருமளவு பாகுபாட்டை உணர வேண்டிய நிலைக்கு முகங்கொடுக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் (UNDP) தயாரிக்கப்பட்ட  பாலின சமூக நிலை சுட்டெண் (2020) என்பதனூடாக, உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிரான  பரந்தளவு பக்கசார்பான நிலைப்பாடு ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் காணப்படுவதாக கண்டறியப்பட்டிருந்தது. ஆய்வின் பிரகாரம், 75 நாடுகளில் நேர்காணலுக்குட்படுத்தப்பட்டிருந்த 30% ஆண்கள் மற்றும் பெண்களில், ஆண் ஒருவர் தமது துணையை அடிப்பது காரணப்படுத்த முடியும் என்பதற்கு உடன்பட்டிருந்தனர். ‘Broadening Gender: Why Masculinities Matter’ (2013) எனும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் போது, தமது வாழ்நாளில் ஏதேனும் ஒரு வகையான வன்முறையை நெருக்கமான பங்காளர் மீது மேற்கொள்ள நேரிட்டதாக இலங்கையின் 20% ஆண்கள் குறிப்பிட்டிருந்தனர். சுமார் 66% ஆனவர்கள் அவ்வாறான வன்முறையை மேற்கொள்ளக்கூடிய அதிகாரம் தமக்கு இருக்கின்றது எனும் உணர்வின் பிரகாரம் மேற்கொண்டதாக குறிப்பிட்டனர். அது போன்று, அண்மையில் வெளியிடப்பட்டிருந்த பெண்கள் நலன் ஆய்வின் (Women’s Wellbeing Survey (2019)) பிரகாரம், தமது வாழ்க்கைத் துணையை அடித்து துன்புறுத்துவதற்கு ஆண்களுக்கு ஒரு காரணம் இருக்கலாம் என இலங்கையின்  35.3% பெண்கள் உடன்பட்டிருந்தனர். தற்போது நிலவும் தொற்றுப் பரவலுடனான சூழ்நிலை காரணமாக, பெண்களுக்கு கொடுப்பனவுகள் அற்ற வீட்டுப் பணி மற்றும் பராமரிப்பு சுமை, பொருளாதார வலுவூட்டல் இன்மை மற்றும் பாலின மற்றும் பாலியல் சார் வன்முறைகளுக்கு வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அதிகரிப்பு போன்ற நிலைகளுக்கு அதிகளவில் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டு எதிர்பார்ப்புகள் நிறைந்த நிகழ்ச்சிநிரலை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றும் இலங்கையின் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப்பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு மற்றும் ஆண்கள் ஈடுபாட்டு ஒன்றியம் ஆகியன இணைந்து மும் மொழிகளிலும் ஊடக பிரச்சாரத் திட்டமொன்றை “ஒத்துழைப்பின் பங்காளர்கள்” எனும் தலைப்பில் அறிமுகம் செய்துள்ளன. இதனூடாக இலங்கையில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் ஆண்கள் மற்றும் சிறுவர்களின் ஈடுபாட்டை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த அறிமுக நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப்பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “வீட்டில் தீர்மானமெடுத்தல் மற்றும் வீட்டு பணிகள் போன்றன சமமாக பகிரப்படுவது அடங்கலாக வாழ்க்கையில் சகல கட்டங்களிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே வளங்கள் மற்றும் வாய்ப்புகள் போன்றவற்றை சமமாக பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் நிலவ வேண்டும். பாலின இடைவெளியை இல்லாமல் செய்வது ஒவ்வொருவரின் பொறுப்பாகும் – தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் என்பது முதல் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் என சகல நிலைகளிலும் இலங்கையில் பாலின சமத்துவத்தை எய்துவதற்கு நாம் அனைவரும் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது.” என்றார்.

பாலின சமத்துவம் என்பது அதன் சுய அபிவிருத்தி இலக்காகும் என்பதுடன் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் (SDGs) 45 இலக்குகள் மற்றும் 54 பாலின – சார் குறிகாட்டிகளில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்குகளை எய்துவது மற்றும் பாலின இடைவெளியை குறைப்பது போன்றன நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் பன்முனை தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் அவற்றை பூர்த்தி செய்வதையும் துரிதப்படுத்தும்.

நிலைபேறான உலகை உருவாக்குவதில் பாலின சமத்துவத்தின் முக்கியத்துவம் தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி ரொபர்ட் யூகம் கருத்துத் தெரிவிக்கையில், “மனித அபிவிருத்திக்கு பாலின சமத்துவமின்மை என்பது பாரிய தடையாக அமைந்திருப்பதுடன், கோவிட்-19 காரணமாக உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவம் தொடர்பில் எய்தியிருந்த முன்னேற்றம் தற்போது பின்தள்ளப்பட்ட வண்ணமுள்ளது. பரந்தளவில் ஒன்றிணைந்த நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை நோக்கி கட்டியெழுப்புவதற்கு பெண்களை பின்தள்ளும் பாகுபாட்டுடனான குணவியல்புகள் மற்றும் செயற்பாடுகள் போன்றன தடுக்கப்படாத வகையில் செய்யல்பட வேண்டும்.” என்றார்.

இந்தத் திட்டத்தில் வீடியோ தொடர்கள் காணப்படுவதுடன், உரையாடல்களும் அடங்கியுள்ளன. இவை நாட்டில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் தேசிய ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யப்படும். திட்டத்தை அறிமுகம் செய்யும் வகையில் ஆண்கள் ஈடுபாட்டு ஒன்றியத்தின் தேசிய ஒழுங்கிணைப்பாளர் சமித சுகதிமால கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் ஆண்கள் மற்றும் சிறுவர்களை ஈடுபடுத்துவது மிகவும் முக்கியமான விடயமாகும். “ஒத்துழைப்பின் பங்காளர்கள்” எனும் திட்டத்தினூடாக, பாலின நீதி மற்றும் மனித உரிமைகள் ஊக்குவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் உலகை கட்டியெழுப்பும் வகையில், ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே காணப்படும் சமநிலையற்ற அதிகார உறவுகள் தொடர்பில் விளக்கமளிப்பது மற்றும் பாரம்பரியமாக பின்பற்றப்படும் ஆணாதிக்க மற்றும் பாலின பாகுபாடுகளை நீக்கி, சகலரும் சமத்துவம் மற்றும் பாகுபாட்டிலிருந்து விடுபட்டவர்கள் என்பதை உணர்த்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.” என்றார்.

“ஒத்துழைப்பின் பங்காளர்கள்” திட்டத்தினூடாக பாலின சமத்துவம் என்பது அடிப்படை மனித உரிமை என்பது உணர்த்தப்படுவதுடன், இந்த தசாப்த கால செயற்பாடுகளில் முன்னுரிமை அடிப்படையில் பின்பற்ற தூண்டப்படும்.

Full Video Series: English | සිංහල | தமிழ்